அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதிய நூல்கள் |
முதல் பகுதி உரைநடையாகவும்,
இரண்டாம் பகுதி ஞானப் பாடல்களையும் கொண்டது. தியானம் செய்யும்போது ஏற்பட்ட
அனுபவங்களை பாடலாக எழுதியுள்ளார். |
மனிதனின் கதை இது. மனிதன் வந்த கதை
இது. இந்த கதை தெரியாமல் வாழ்வில் எழும் சிக்கல்கள் என்ன? அதைப் போக்குவது
எப்படி? என்று விஞ்ஞான விளக்கத்துடன் எழுதியுள்ளார். உலக விஞ்ஞானிகளின்
சிந்தனைக்கு ஒரு சவால் இந்நூல். |
உலக மக்கள் வாழ்வில் அமைதி தழைக்க
அரசியல் துறைத் தலைவர்கள், பொருள் துறைத் தலைவர்கள், மதத் தலைவர்கள் செய்ய
வேண்டியது என்ன? எவ்வாறு படிப்படியாக அதற்கான செயல் திட்டங்களை அமுல் செய்ய
வேண்டும். ஐக்கிய நாட்டுச் சபையின் பொறுப்பு என்ன? கடமை என்ன? தனி மனித
அமைதி, சமுதாய அமைதி, உலக அமைதி ஆகியவற்றிற்கான நடைமுறைத் திட்டங்கள்
வரையறுத்துக் கூறியுள்ளார். இந்த நூலை உலக மக்கள் அனைவரும் படிக்க வேண்டியது
அவசியம். |
2.4 திருக்குறள் உட்பொருள் விளக்கம் |
திருக்குறளுக்கு விளக்கம்
எழுதியவர்கள் பலர். மகரிஷி
அவர்கள் விஞ்ஞான மெய்ஞ்ஞானக் கருத்துக்களைக் கொண்டு 100
குறள்களுக்கு வித்தியாசமான முறையில் விளக்கம் அளித்துள்ளார். |
2.5 எனது வாழ்க்கை விளக்கம் |
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை உள்ளது உள்ளவாறே ஔpவு மறைவு
இன்றி எழுதியுள்ளார். அவரது இளமைப் பருவ நிகழ்ச்சிகள் மிகவும் உருக்கமானவை.
உயிர் என்றால் என்ன? வறுமை ஏன் ஏற்படுகிறது? இறைநிலை என்றால் என்ன? என்ற
ஆராய்ச்சி செய்யும்போது கொண்ட அனுபவங்கள், அவரது வௌpநாட்டு அனுபவங்கள்
ஆகியவற்றைக் குறித்து எழுதியுள்ளார். |
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
அவர்கள் எழுதிய நூல் இது. குண்டலினியோகப் பயிற்சியில் ஆரம்ப சாதகர்கள்
செய்ய வேண்டிய அகத்தாய்வுப் பயிற்சி குறித்து விளக்கப்பட்டுள்ளது. வாழ்வின்
நோக்கம், தவத்தால் வாழ்க்கைப் பிரகாசிக்கும், தவநிலைகளும் அதன் பயன்களும்,
எண்ணம் ஆராய்தல், ஆசைச் சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், நான்
யார்? போன்ற தலைப்புகளில் எழுதியுள்ள கட்டுரைகள் சாதனை மார்க்கத்திற்கு
ஏற்றது. |
உடலைப் பற்றி, மனதைப் பற்றி,
உயிரைப் பற்றி, புலன்களைப் பற்றி, தன்னிடம் உள்ள குறை நிறைகள், சடங்குகள்
ஏன், தேவைதானா? ஆலய வழிபாடு எதற்காக? நமது கடமை என்ன? என்பதைப் பற்றி
தெரிந்து கொள்ள ஏற்ற நூல் . இதில் உடல் ஓம்பலும் உடற்பயிற்சியும்,
வாழ்க்கைத் தத்துவம், அறுகுணச் சீரமைப்பு, பாவப் பதிவுகளும் போக்கும்
வழிகளும், உயிரும் மனமும், ஐயுணர்வும் மெய்யுணர்வும், பால் உறவும்
ஆன்மீகமும், ஆலய வழிபாடு, மதமும் சடங்குகளும், கர்மயோகம் என்ற தலைப்புகளில்
கட்டுரைகளை எழுதியுள்ளார். மனித குலம் படித்து பயன் பெற வேண்டிய நூல் இது. |
2.8 இறையுணர்வும் அறநெறியும் |
இறைநிலை உணர்ந்த இன்பத்தில் எழுந்த பாடல்கள். இறைநிலை
என்பது என்ன? அதிலிருந்து தோன்றிய விண், விண்ணின் சுழற்சியால் ஏற்பட்ட
காந்தம், பேரியக்க மண்டலத்திற்கும் கருமையத்திற்கும் உள்ள தொடர்பு என்பன
குறித்த விஞ்ஞானக் கவிதைகள் அடங்கியது. |
2.9 வாழ்க்கை வள உயர்வுப்படிகள் ஐந்து |
உலக சமுதாய சேவா சங்கத்தில்
அளிக்கப்படும் பயிற்சி முறையில் விளக்கப்படும் ஐந்து அங்கங்களைக் கொண்ட
தொகுப்பு. உடல் நலம், மனநலம், நட்பு நலம், பிரம்ம ஞானம், கருமையம் என்ற
ஐந்தைப் பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ள நூல் இது. |
காந்த நிலை அறியாமல் கடவுளை அறிவதோ,
கருமையம் அறியாமல் கடவுளை அறிவதோ மனித குலத்திற்கு இயலாது. காந்தம் என்றால்
என்ன? அக்காந்தம் பிரபஞ்சத்தில் எவ்வாறு உள்ளது? மனிதனிடம் எவ்வாறு உள்ளது?
என்பதை பற்றி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. |
2.11 அருட்பேராற்றலின் அன்புக்குரல் |
பனிரெண்டு பாடல்களைக் கொண்டது.
ஒவ்வொரு பாடலுக்கும் ஆங்கிலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. இறைநிலை உணர்ந்த
இன்பத்தில் எழுந்த பாடல்கள். இறைநிலை என்பது என்ன? அதிலிருந்து தோன்றிய விண்,
விண்ணின் சுழற்சியால் ஏற்பட்ட காந்தம், பேரியக்க மண்டலத்திற்கும்
கருமையத்திற்கும் உள்ள தொடர்பு என்பன குறித்த விஞ்ஞானக் கவிதைகள் அடங்கியது.
அமெரிக்கா சென்றிருந்தபோது பெனின்ஹில் என்ற இடத்தில் உதித்த கவிதைத்
தொகுப்பு. |
2.12 உலக சமுதாய சேவா சங்கம் |
1958-ம் ஆண்டில் தனிமனித
அமைதிக்காகவும் உலக சமாதானத்துக்காகவும் தொண்டாற்ற அiமைந்த இயக்கமே உலக
சமுதாய சேவா சங்கம். சங்கத்தின் நோக்கம், பயிற்சி முறைகள் மற்றும்
சங்கத்துடன் இணைந்து செயலாற்றும் அறக்கட்டளைகளின் முகவாpகள் அடங்கிய
வெளியீடு. |